பைக், இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து... 3 பேர் துடிதுடிக்கப் பலி!

 
பைக் பைக்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று காலை நிகழ்ந்த கோர விபத்து அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தது காண்போரை நெஞ்சைப் பதற வைத்தது.

பைக் விபத்து

இந்த விபத்தில் 17 வயதான கோகுல், பிரசன்னா மற்றும் யுவராஜ் ஆகிய மூன்று இளம் தளிர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பைக்

பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல் அறிந்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.