அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பரிதாப பலி!

 
பைக் பைக்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை பகுதியில் நேற்று மாலை இந்த சோகமான விபத்து சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சுவாமிமலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அங்குள்ள ஒரு வளைவுப் பகுதியில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால்  வண்டியோடு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சுவாமிமலை காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து நடந்த விதம் குறித்து காவல்துறையினர் தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.