இரயில் வர்றதை கவனிக்கல... பேருந்து நிலை தடுமாறி 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி!

 
ரயில் ரயில்

சிலி நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நகரத்தில் இன்று காலை ஒட்டுமொத்த பொதுமக்களையும் உலுக்கும் வகையிலான ஒரு பயங்கர இரயில் விபத்து நேர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று, அங்குள்ள ஒரு முக்கிய இரயில்வே கடப்பைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்தப் பாதையில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தொடருந்தை (இரயில்) எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் ஓட்டுநர் முற்றிலும் கவனிக்காமல் அலட்சியமாகப் பேருந்தை முன்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் இந்த கவனக்குறைவு காரணமாக, இரயில்வே தண்டவாளத்தின் நடுவே பேருந்து சென்றபோது வேகமாக வந்த இரயில் பேருந்தின் மீது மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய   வேகத்தில் பேருந்து பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு முற்றிலும் நசுங்கியதால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் அலறியடித்தனர். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்தின் கோரப் பிடியில் சிக்கி,  குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்த மற்ற 11 பயணிகளைப் பல மணி நேரம் போராடி மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த   போக்குவரத்துப் போலீசார், விபத்துக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த பேருந்தின் ஓட்டுநரை முறைப்படி வழக்குப் பதிவு செய்து  கைது செய்தனர். இரயில்வே கேட் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.