ஆம்னி பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபப் பலி!

 
ஆம்னி ஆம்னி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று   சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தென்மாவட்டம் நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து (ஆம்னி பஸ்) ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்த அந்தப் பேருந்து, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, எதிர்த்திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் சொகுசுப் பேருந்தின் மீது   நேருக்கு நேர் மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் முற்றிலும் நசுங்கி உருக்குலைந்ததால், உள்ளே இருந்த பயணிகள்  பயத்தில் அலறியடித்தனர். இந்த விபத்தின் கோரப் பிடியில் சிக்கி, ஒரு பேருந்தின் ஓட்டுநர்   சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்த இருதரப்புப் பயணிகள் மொத்தம் 15 பேரை  போராடி மீட்டனர். அவர்கள் அனைவரும் அவசர அவசரமாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.