பயங்கர விபத்து... வேன் மீது கார் மோதியதில் ஒருவர் பலி !

 
accident

திருச்செந்தூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்பவர் தனது நண்பர்களுடன் குலசேகரபட்டினம் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். ஆறுமுகநேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், மாலை நேரத்தில் குறும்பூர் நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

ஆறுமுகநேரியைத் தாண்டியதும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடையில் நின்றுகொண்டிருந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. பொதுமக்களும் பைக் உரிமையாளர்களும் காரைத் துரத்திப் பிடித்த நிலையில், மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் கார் ஓட்டிய லட்சுமணன் அருகில் அமர்ந்திருந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றித் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவரும் மதுபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.