அதிகாலையில் கோர விபத்து... ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி!
ஆந்திராவின் பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டை அருகே திருப்பதி சென்ற தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலுரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் நிகழ்ந்த இந்தத் கோர விபத்து குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் குண்டூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடம் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது போன்ற தொடர் விபத்துக்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் அதிகாலையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
