காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்... புதுமணப்பெண் மீது ஆசிட் வீச்சு!

 
acid acid

டெல்லியில் தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவிருப்பதை அறிந்த 26 வயது இளம்பெண், ஆத்திரத்தில் புதுப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14 அன்று இந்திரா விஹார் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலில் ஈடுபட்ட பெண், மணமகனுடன் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை ஏற்க முடியாமல் அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். திருமணத்தை நிறுத்துவதற்காகவும், பழிவாங்கும் நோக்கோடும் ஆசிட் வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

acid

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணைக் கைது செய்துள்ளனர். காதலியின் இந்த அதிரடி முடிவால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆசிட் வீச்சு தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.