அதிரடி!! கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000/- ஆக உயர்வு!!

 
இலவச திருமணம்

தமிழகத்தில் கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு உதவித்தொகை ரூ20000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இது குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் , 'இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு  திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/ ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இலவச திருமணம்
ஒவ்வொரு ஆண்டும்  ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள  20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.இதே போல் டிசம்பர் 4ம் தேதி திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு  முதல்வர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மொத்தமாக இதுவரை  20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  இன்னும் 283 ஜோடிகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் செய்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவை திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கவும் ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 
அதன்படி 


திட்ட விவரம்

திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் - ரூ.20,000/-
மணமகன் ஆடை:ரூ.1000/-
மணமகள் ஆடை: ரூ.2000/-
திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000/-
மாலை, புஷ்பம் - ரூ.1000/-
பீரோ : ரூ.7,800
கட்டில்-1 : ரூ.7,500
மெத்தை : ரூ.2,200
தலையணை-2 : ரூ.190
பாய்-1 : ரூ.180
கைக்கடிகாரம்-2 : ரூ.1,000
மிக்ஸி-1 : ரூ.1,490
பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640
கூடுதல்      : ரூ.50,000/-

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! அறநிலையத்துறை !
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரைப்படி  திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டசெலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் பெறப்பட வேண்டும்.  திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு ஜோடி இலவசத் திருமணத்திற்கு  திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web