தேர்தல் முடிவுக்கு முன்பே அதிரடி... அடுத்தடுத்து அதிமுகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்!

 
அதிமுக அதிமுக

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாற்றுக்கட்சியினர் திரளாக அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உள்ளூர்குருக்கி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சிகளைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள் இன்று (ஏப்ரல் 26) தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுக

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் வலுவான அடித்தளத்தை நம்பி தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக இணைந்த இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களுக்குக் கட்சியின் துண்டுகளை அணிவித்து கே.பி.முனுசாமி முறைப்படி வரவேற்றார்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் நிலவி வரும் வேளையில், முடிவுகள் வருவதற்கு முன்னரே இளைஞர்கள் அதிமுகவை நோக்கி வருவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேப்பனப்பள்ளி போன்ற முக்கிய தொகுதிகளில் நடைபெறும் இத்தகைய மாற்றங்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.