உதயநிதியைக் கைது செய்தது போல நடிகைகள் பற்றித் தவறாகப் பேசும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை தேவை: விஷால் கோரிக்கை!
திரைப்பட நடிகைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தவறாகப் பேசி வீடியோ வெளியிடும் யூடியூபர்கள் மீது முதல்வர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
பணத்திற்காகச் சில யூடியூபர்கள் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தவறாகப் பேசி வருகின்றனர். "என் நண்பர் உதயநிதி தவறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அதேபோல, நடிகைகள் பற்றித் தவறாகப் பேசும் யூடியூபர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய விஷால், மக்கள் சேவை செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், தனுஷ் அரசியலுக்கு வந்தால் தனது முதல் வாழ்த்து அவருக்குத்தான் என்றும் கூறினார். தனுஷ் மிகச் சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர் என்பதால், அவர் முழுநேர அரசியலுக்கு வந்தால் தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை இழக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் தன்னிடம் ஒரு கதையைக் கூறி நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய விஷால், ஆனால் அவருடன் இணைந்து தயாரிப்பாளராகப் படம் செய்ய மாட்டேன் எனத் தெளிவுபடுத்தினார். முந்தைய கசப்பான சம்பவங்களைச் சரி செய்ய முடியும் என்றும், மிஷ்கின் எப்போதும் தன் மீது நல்ல எண்ணம் கொண்டவர் என்றும் தெரிவித்தார்.
