தவெக மேடையில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொண்டர்கள் கண்டனம்!

 
தவெக ஆடல் பாடல்

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிறைவு விழா கொண்டாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சரும் தவெக பிரமுகருமான விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சி கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டையில் தவெக அரசின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆடல்-பாடல் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பரவின.

புதிய அரசியல் மாற்றத்தைத் தருவதாகக் கூறி களமிறங்கியுள்ள தவெகவில், பழைய திராவிடக் கட்சிகளின் பாணியைப் பின்பற்றி இதுபோன்று ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதா எனத் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆட

கழகத்தின் கொள்கை மற்றும் ஒழுக்கத்திற்கு முரணான இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் விஜயபாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் முதல்வர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு இணையம் வாயிலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.