வைரல் வீடியோ... நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் தனது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு !

 
ஆத்விக்
 

தமிழ் ரசிகர்களால் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக். பள்ளியில் தற்போது படித்து வரும்  குழந்தையான ஆத்விக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.  அஜித்தைப் போலவே மகன் ஆத்விக்கும் ஸ்போர்ட்ஸ்-இல் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.  பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் வென்றுள்ளார்.

இது குறித்த  வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில்  பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படமும், ஏப்ரல் மாதத்தின் 2 வது வாரத்தில் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.  அஜித்குமார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில்தான் கலந்து கொள்ள இருப்பதாக  ஏற்கனவே அறிவித்துள்ளார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற, கார் ரேஸில் அஜீத் அணி 3  வது இடம் பிடித்து அசத்தியது  நாட்டிற்கே பெருமை சேர்த்த அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

ஆத்விக்

ஆத்விக் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் சிறப்பாக ஓடி, முதல் இடத்தினைப் பெற்றார். வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பா சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிக்கின்றார், மகன் பள்ளிகளுக்கு இடையில் வெற்றிகளையும் பதக்கங்களையும்  குவிக்கின்றார் என வாழ்த்தி வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web