நடிகர் அஜீத்துக்கு படப்பிடிப்பில் விபத்து... ஷாக் வீடியோ!

 
அஜீத்
 

தமிழ் ரசிகர்களால் தல ஆக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித்தின் அடுத்தபடம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்   படமாக்கப்பட்ட விதம் குறித்து எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்திற்காக டூப் எதுவும் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து  ஸ்டண்ட் காட்சிகளில் தாமே நடித்துள்ளார்.  


 

மகிழ்திருமேனி இயக்கத்தில் 2023 நவம்பரில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர் அஜித் ஆரவ்வுடன் காரரில்   சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ரோஷமாக பயணிக்கிறார்.  இவர்களது கார் திடீரென  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து அஜித் மற்றும் ஆரவ் படுகாயம் அடைந்தனர். இருவரையும் காப்பாற்ற காட்சி முடிந்ததும் படக்குழுவினர் விரைகின்றனர்.

அஜீத்
இந்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’என்னதான் நடிப்பிற்காக அர்ப்பணிப்புடன் இருந்தாலும், டூப் இல்லாமல் நடித்து இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டுமா? பாதுகாப்புடன் இருங்கள் அஜித் சார்’ என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.  
’விடாமுயற்சி’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் அஜீத் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது , அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்தநாளே அஜீத் நலமுடன் வீடு திரும்பினார். அத்துடன் பைக் பயணத்திலும் ஈடுபட்டார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web