திரையுலகில் பரபரப்பு... நடிகர் அல்லு அர்ஜூன் கைது!

 
அல்லு அர்ஜுன்

  பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான தகவலில் திரைப்பட நடிகரும் சின்னத்திரை நடிகருமான அல்லு அர்ஜுனை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியில்  கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் திருமணமான பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

 

இச்சம்பவத்தை பொறுத்தவரை  தெலுங்கானா அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதுடன், எதிர்காலத்தில் பிரீமியர் ஷோக்கள் இருக்காது என ஏற்கனவே அறிவித்துள்ளது. பிரீமியர் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் வருகை குறித்து எந்தவித முன்னறிவிப்பும் கிடைக்காததால் போலீசார் கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  

அல்லு அர்ஜுன்

 

போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் நெரிசல் ஏற்பட்டு ரேவதி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.   இதற்கான விசாரணைக்காக  அல்லு அர்ஜுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!