நடிகர் அர்ஜுன் ராம்பால் கோவாவில் பதிவு திருமணம்.. காதலி கேப்ரியெல்லாவைக் கரம் பிடித்தார்!
பாலிவுட் பிரபல நடிகரான அர்ஜுன் ராம்பால் (54), கடந்த 8 ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்து வந்த மாடல் அழகி கேப்ரியெல்லாவை கோவாவில் வைத்து ரகசியமாகப் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். 54 வயதான நடிகர் அர்ஜுன் ராம்பாலும், மாடல் அழகியுமான கேப்ரியெல்லாவும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.
சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது கோவாவில் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பே லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நெருங்கிய வட்டாரங்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ள இவர்களது திருமணச் செய்தி வெளியானது முதல், திரையுலகினரும் ரசிகர்களும் இணையதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
