நடிகர் அஸ்வின் குமார் இயக்குநர் ராஜசேகரின் பேத்திக்கும் கோலாகலத் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!
Nov 20, 2026, 16:20 IST
நடிகர் அஸ்வின் குமார், மறைந்த பிரபல இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியை இன்று (நவ. 20) கோவையில் திருமணம் செய்துகொண்டார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின் குமார். இதைத்தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஸ்வின் குமார் – புவனேஸ்வரி திருமணம் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மறைந்த இயக்குநர் ராஜசேகர், ரஜினிகாந்த் நடித்த 'படிக்காதவன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
