”நின்றுவிட்டது அந்த அன்புக்குரல்!” ... தேவா குறித்துநடிகர் சார்லி உருக்கம்
Oct 17, 2026, 15:50 IST
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று நடிகர் சார்லி வேதனை தெரிவித்துள்ளார். தேவாவின் மறைவு குறித்துப் பேசிய அவர், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தனது சோர்வையும் களைப்பையும் வெளிக்காட்டாமல், அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்புடன் பழகும் உயர்ந்த பண்பு கொண்டவர் தேவா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தேவா தன்னை எப்போதும் உரத்த குரலில், “அன்பு தம்பி சார்லி” என்று உரிமையுடன் அழைப்பதை நினைவுகூர்ந்த அவர், அந்த அன்பான குரல் இன்று கேட்க முடியாமல் போனது மிகுந்த வேதனையை அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேவாவுடன் கொண்டிருந்த அன்பையும் நெருக்கத்தையும் நினைத்து அவர் பகிர்ந்துகொண்ட இந்த நினைவுகள், இசையமைப்பாளரின் மறைவு ஏற்படுத்தியுள்ள துயரத்தை வெளிப்படுத்துகின்றன.
