நடிகர் சோ மனைவி மரணம்... சசிகலா இரங்கல்!
இன்று காலை நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியின் மனைவி சென்னையில் காலமான நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரங்கல் தெரிவித்து சசிகலா, தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) August 20, 2024
மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது…
மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

அம்மையார் சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
