நடிகர் தனுஷ் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம்!

 
தனுஷ் பழனி

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற திரைப்படத் தொடக்க விழாவைத் தொடர்ந்து அவர் பழனிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் பெற்றோருடன் இன்று அதிகாலையில் பழனி மலைக்கோயிலுக்கு வருகை தந்தார். வழக்கமான பாதையான படிப்பாதை வழியாக அவர்கள் குடும்பமாக மலைமீது ஏறிச் சென்றனர்.

பழநி  முருகன் முருகர்

திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்ட அவர், மூலவர் முருகப்பெருமானை உளமாறத் தரிசனம் செய்து தனது குடும்பத்தினருடன் வழிபாடுகளை மேற்கொண்டார்.

சாமி தரிசனம் நிறைவடைந்த பிறகு, அடிவாரத்திற்குத் திரும்புவதற்காக அவர் ரோப் கார் சேவையைப் பயன்படுத்தினார். இதனைக் கண்ட அப்பகுதி ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.