ரூ28 லட்சம் தேவைப்படுது.. உதவி பண்ணுங்க... தனுஷ் பட நடிகர் லிவர் சிரோசிஸ் நோயால் கதறல்!

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநய் லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேல் சிகிச்சைக்கு ரூ28 லட்சம் தேவைப்படுவதால் உதவி செய்யும்படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ நடிகர்கள் ஆள் அட்ரசே இல்லாமல் போய்விடுகின்றனர். அந்த வகையில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இவரை 90ஸ் கிட்ஸ்கள் நிச்சயம் நடிக்க வாய்ப்பில்லை. தமிழில் கடந்த 2002 ல் வெளியான படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தான் நடிகர் தனுஷ், ஷெரின் போன்றவர்கள் அறிமுகமாகினர்.
அந்த வகையில் இதே படத்தில் தனுஷின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபினய். பொதுவாக சாக்லேட் பாய் முத்திரையை பெற்றுவிட்டாலே சினிமாவில் நிலைத்து நிற்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அவர்களை ஆக்க்ஷன் ஹீரோக்களாக ஏற்றுக்கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துவிடும். இதே கதை தான் அபிநய்க்கும் நந்தது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த உள்ளார், ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் இவர் பல்வேறு விளம்பரங்களில் கூட நடித்தார். அதே போல தொடர்ந்து அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாம் ஹீரோ என்று தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
இறுதியாக சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்து இருந்தார். இது குறித்து அவர் துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் எட்டு படங்களில் என்னை புக் செய்தார்கள். ஆனால், நான் ஹீரோவாக நடித்த படம் ஓடவில்லை என்பதால் அந்த மீதி படங்கள் அனைத்தும் போய்விட்டது. அம்மா இறந்த பின்னர் வறுமை, எல்லாத்தையும் வித்துட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன். அதுனால் தான் இப்படி உடல் எடை கொறஞ்சடுச்சி என மிகவும் உருக்கமுடன் பேசி இருக்கிறார்