நடிகர் தனுஷ் திடீர் டெல்லி பயணம் - தீவிர அரசியலில் களம் இறங்குவது குறித்து முக்கியப் புள்ளிகளை சந்திக்க திட்டம்!

 
தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தொடர்ச்சியான தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்

அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வ நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இந்தச் சூழலில், அவர் திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அங்குள்ள மத்திய அரசின் முக்கியப் பிரமுகர்களையும் அரசியல் புள்ளிகளையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் மேலும் எகிற வைத்துள்ளது.