பிரபல தமிழ்பட காமெடி நடிகர் அதிரடி கைது! நீதிபதியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு!
Updated: Oct 20, 2023, 17:57 IST

காமெடி நடிகர் ஜெயமணியை கிண்டி காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர்.
நடிகர் ஜெயமணி கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் காமெடி நடிகர் ஜெயமணி நடைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நீதிபதியை வம்பிழுத்து, அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயமணி மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிண்டி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். நடிகர் ஜெயமணி, நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
From around the
web