மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி... திருப்பதி லட்டு விவகாரம் கிளம்பிய சர்ச்சை!

 
கார்த்தி
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி நக்கலடித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் நிலையில், நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

‘மெய்யழகன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சில் பிஸியாக சுற்றி வரும் நடிகர் கார்த்தி, நேற்று ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற தெலுங்கு பதிப்பு பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது, நிகழ்ச்சி தொகுப்பளார் நடிகர் கார்த்தியிடம் ”லட்டு வேண்டுமா?” என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார். மேலும் லட்டு விவகாரம் குறித்து கிண்டலடித்து பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு இப்போது லட்டு வேண்டாம் என்று பேசியது குறித்து ஆந்திர மாநில துணைமுதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கோபப்பட்டுள்ளார்.

திருப்பதி லட்டு

இன்று காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலுக்கு வந்திருந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யான், பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “சினிமா நிகழ்வில் லட்டுவை கேலி செய்வீர்களா? இது சென்சிடிவான விஷயம். உங்களுக்கு நடிகராக மரியாதை கொடுக்கிறேன். சனாதன தர்மம் என வரும் போது நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என கோபமாக கூறினார். தெலுங்கு மக்களிடையேயும் நடிகர் கார்த்தியின் பேச்சு அதிருப்திக்குள்ளாக்கியது.

தனது பட ரிலீஸ் சமயத்தில் திடீரென விஸ்வரூபமாக எழுந்த இந்த பிரச்சனையையடுத்து, நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரி தனது எக்ஸ் ப்க்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். 

அதில், “பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். திருப்பதி வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!