காதலியை கரம் பிடித்த பிரபல நடிகர்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
kavin

2011ல்  தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் அறிமுகமானவர் கவின். தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி  சீரியல்கள் மூலம் பிரபலமானார். அதே நேரத்தில் திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணிபுரிந்து வந்தார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம்  இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

kavin


 ‘சத்ரியன்’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்தவர் . 2021ல்  ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.  இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

kavin


இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை இன்று திருமணம் செய்துள்ளார். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web