யாரும் நம்பாதீங்க... எல்லாம் பொய்... நடிகர் நிவின் பாலி ஆவேசம்!
தமிழ் திரையுலகில் நேரம், ரிச்சி ஆகிய படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்றவர் நிவின் பாலி. இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம் சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிவின் பாலி மீது நெரியமங்கலத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் அளித்த நிலையில், அவர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் நிவின்பாலி, “நான் இங்கேயே தான் இருக்கிறேன்.
எங்கும் செல்லப்போவது இல்லை. மீடியாக்கள் இதை அவசியமின்றி பூதாகரமாக்கி வருகின்றன. அதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறிய முயற்சிக்க வேண்டுகோள் விடுக்கிறேன். இயலவில்லை என்றாலும் கவலையில்லை, நான் போராட தயாராக உள்ளேன். சம்பந்தப்பட்ட பெண் முன்பு ஓட்டலில் என்னை சந்தித்ததாகவும், நான் அவர்களை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது வேறு ஒரு கதை கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருடன் பணம் செலவிட்டு படம் செய்துள்ளேன். அதுமட்டும் தான் அவருக்கும், எனக்குமான தொடர்பு” என விளக்கம் அளித்துள்ளார்.