"மாணவர்கள் மீது வழக்கு போடாதீர்கள்" - நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்!

 
மோடிபிரகாஷ்ராஜ் பிரகாஷ்ராஜ்மோடி நீட்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அன்போடு கண்டித்துத் திருத்த வேண்டுமே தவிர, வழக்குப்பதிவு செய்து அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி தடியடி

பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பதிவு ஒன்றைக் குறிப்பிட்டுத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ள அவர், மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள் மற்றும் நமது குழந்தைகள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் வகையில் அவர்கள் மீது சட்டரீதியான வழக்குகளைப் பாய்வதைத் தவிர்த்து, நிலைமையை அன்போடும் பரிவோடும் அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலீசார் தடியடி

தவறுகள் நடக்கும்போது வழக்குப் பதிவு செய்து துன்புறுத்தாமல், பெரியவர்களாக நின்று அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதே முறையான அணுகுமுறையாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.