பிரதமர் மோடி தான் மிகச்சிறந்த நடிகர்.. மிகச்சிறந்த பெர்ஃபார்மர்.. சரமாரியாக விமர்சனம் செய்த பிரகாஷ் ராஜ்..!!

 
பிரதமர் மோடி - நடிகர் பிரகாஷ் ராஜ்

பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் மிகச்சிறந்த நடிகர் என விமர்சித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்பைத் தாண்டி பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தன் பாஜக எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், இதற்காக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.  தன் நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக நுழைந்த பிரகாஷ் ராஜ், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.


அதன் பின் நேரடி அரசியலில் இருந்து விலகி இருக்கும் பிரகாஷ் ராஜ், தன் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்துள்ள நேர்க்காணலில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Prakash Raj Shares His Take On Farmers Protest, Tells PM Modi That "Sorry  Is Not Enough"

இந்த நிகழ்ச்சியில் “நீங்களும் நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட்,  ஹேர்ஸ்டைல் டிபார்ட்மெண்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறாரே” என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web