விக்ரம் லேண்டரின் முதல் புகைப்படம்!! நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை புகைப்படம் !!

 
பிரகாஷ்ராஜ்

 நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம் என  நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு , முக்கிய செய்தி நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம்   பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் பகிர்ந்துள்ளார்.  அட்ஜே நேரத்தில்  இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவான சந்திரயான் - 3 விண்கலம் நிலவை அடைய உள்ள நிலையில் பிரகாஷ்ராஜின் இந்தச் செயல் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.  


 

இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 வின்கலத்தை அனுப்பியுள்ளது.  எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து   ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள   விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக ஆகஸ்ட் 17ம் தேதி மேற்கொண்டது.

விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பதிவிட்டுள்ளது. அதே போல் ஆகஸ்ட் 18 முதல்  விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.  பின்னர்  2வது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை நேற்று அதிகாலை 2 மணிக்கு குறைக்கப்பட்டது.

சந்திராயன்3

இந்நிலையில் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web