கிராமப்புற பெண்களுக்குப் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

 
லாரன்ஸ்

பொதுமக்களுக்கு உதவி செய்யும் பயணத்தின்போது பெண் ஒருவர் பட்டுப்புடவை ஒன்று வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, கிராமப்புறங்களில் வாழும் எத்தனையோ பெண்களுக்குத் தங்களது வாழ்நாளில் ஒருமுறைகூட பட்டுப்புடவை அணியும் வாய்ப்போ வசதியோ கிடைத்திருக்காது என்ற உண்மையை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராகவா லாரன்ஸ்

கிராமப்புறப் பெண்களின் அந்த நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் நோக்கில், அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கும் பொருட்டு முதற்கட்டமாக ஐயாயிரம் பட்டுப்புடவைகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பிற்குப் பொதுமக்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.