4 வயசுல செய்த உதவி... 20 வருடங்களில் விருட்சமாக வளர்ந்திருக்கு.... நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

 
ராகவா லாரன்ஸ்


தனது 20 வருட கனவு தற்போது நினைவாகியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.நடிகர் ராகவா லாரன்ஸ், திரையுலகில் மட்டுமல்லாமல் நிஜத்தில் செய்து வரும் உதவிகள், அவரை பொதுமக்களிடையே நிஜ ஹீரோவாக காட்டி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று  அடுத்த தலைமுறை எழுந்து நிற்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுளார்.20 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உதவி கேட்டு வந்த ஒரு தாயால் இந்தப்பயணம் தொடங்கியது. சிறுவனாக வந்து சேர்ந்த சக்தி தற்போது  வளர்ந்து இளைஞனாகி, படித்து முடித்து, இன்று பணியில் இணைந்துள்ளார். 


இது குறித்து சக்தி கூறுகையில்.. என் 4 வயதில் என் தந்தையை இழந்து விட்டேன் அப்போது இருந்து இங்கு அண்ணனின், ஹாஸ்டலில் தான் என் வாழ்க்கை.  இங்கு உள்ள குழந்தைகள் தான் என் உலகம். அண்ணன் எப்போதும் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். இன்று நான் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளேன். எனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை இங்கு இந்த குழந்தைகளுக்காக செலவு செய்வேன் என்றார். 

ராகவா லாரன்ஸ்

சக்தியை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ், “நான் போட்ட விதை இன்று வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த தாய் என் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். அன்று அவர்களை என் வீட்டுக்கு அழைத்து சென்றேன், இரண்டு குழந்தைகள் இன்று 60 குழந்தைகளாக ஆகி விட்டார்கள். சக்தி இன்று வளர்ந்து ஒரு பணியில் இணைந்திருக்கிறார். காவல்துறையில் இணையவும் முயற்சி எடுத்து வருகிறார். மிகப்பெருமையாக உள்ளது” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web