மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

 
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் 'தர்மன்' (தலைவர் 173) திரைப்படத்தின் 3-ம் கட்டப் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, மைசூருவில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த் வருகை குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் குவிந்ததால் சிறிது நேரம் நெரிசல் ஏற்பட்டது. பின்னர் ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டு அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.