அப்பாவாகிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி!

 
ரெடின் கிங்க்ஸ்லி

 தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் நண்பருமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவரது மனை சங்கீதா. இவர்களுக்கு 2023 டிசம்பரில் திருமணம் நடைபெற்ற நிலையில்  வயதான தம்பதி என்று சமூகவலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகினர்.

இந்த கேலி கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இருவருக்கும் குழந்தை பிறக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டா பதிவில் சங்கீதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையில் சங்கீதா நடித்த கொண்டிருந்த தொடர்.. சன் டிவி ஆனந்த ராகம் தொடரில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்.  தொலைக்காட்சி தொடர் சீரியலில் மற்றும் படங்களில் நடித்து வரும் சங்கீதா இனிமேல் எந்த தொடர்களிலும் நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.


சமீபத்தில் இந்த ஜோடி தலை தீபாவளியும் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்தப் புகைப்படங்களையும் சங்கீதா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!