துரோகம் செய்த கணவர்.. கைத் தூக்கிவிட்ட பாவனா.. மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சம்யுக்தா..!
மாடலிங் துறையில் உலா வந்த சம்யுக்தா கடந்த 2020 ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பிக்பாஸ் மூலம் பேமஸ் ஆன சம்யுக்தா தற்போது சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். இவரும் இவரது கணவர் கார்த்திக்கும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் முதல் முறையாக தனது திருமண முறிவைக் குறித்து பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் தனது ரசிகர்களுடான கலந்துரையாடலின் போது சொந்த வாழ்க்கைக் குறித்து மனம் திறந்தார்.

அப்போது பேசிய அவர்,
“கடவுள் எனக்காக அனுப்பி வைத்த ஏஞ்சல் தான் பாவனா. அவர் தான் என்னை பிக்பாஸுக்கு அனுப்பி வைத்தார். கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் துபாயில் இருக்கும் என் கணவர், 4 வருஷமா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதை அறிந்து மனமுடைந்து போனேன். என்ன பண்றதுனே தெரியாம இருந்தேன். அப்போ லாக்டவுன் போடப்பட்டு இருந்ததால் என்னாலும் துபாய்க்கு போக முடியவில்லை. என்னுடைய அப்பார்ட்மெண்ட் அருகில் தான் பாவனாவின் மாமனார் மாமியார் இருக்கிறார்கள். அவ்வப்போது பார்க்கும் போது ஹாய்.. பாய்னு மட்டும் சொல்லிப்போம். ஒருமுறை சும்மா வாக்கிங் போகலாம்னு கூப்பிட்டார் பாவனா. அப்போது என் பேமிலி பற்றியும் கணவர் பற்றியும் கேட்டார். அப்போ நான் நடந்ததை கூறி அழுதேன். அதுக்கப்புறம் தான் பாவனாவோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். லாக்டவுன் சமயத்தில் இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வோம். அப்படி தான் எங்கள் நட்பு வளர்ந்தது.

அதன்பின்னர் அவர் தான் என்னை பிக்பாஸுக்கு பரிந்துரை செய்தார். அவரால் தான் என் வாழ்க்கையே மாறியது. இப்போ சம்யுக்தா யாருன்னு உலகத்துக்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் பாவனா தான். இப்பவும் என்னால் கணவர் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் ஏன் இப்படி பண்ணார்னு சில நேரம் யோசிப்பேன். என் பையனும் அவ்வப்போது அப்பா எங்க என கேட்கும்போது, அப்பா வேலைல இருக்காரு, அவரால இந்தியா வர முடியவில்லைனு சொல்லுவேன். அதேபோல் இரண்டாவது திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சம்யுக்தா, முதல் திருமணமே இன்னும் விவாகரத்தில் முடியவில்லை என கூறினார். ஏனெனில் வெளிநாட்டில் இருந்துகொண்டு அவர் வர மறுப்பதனால் விவாகரத்து பெறமுடியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தோம், ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை என தெரிவித்துள்ளார் சம்யுக்தா.
