நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் திருமணம் நடந்தேறியது... குவியும் வாழ்த்துக்கள்!
Sep 16, 2024, 12:34 IST
நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் திருமணம் நெருங்கிய நண்பர்கள், இருவீட்டார் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்தது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இன்று திருமணமும் எளிமையாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கோயிலில் நடந்து முடிந்தது.

இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள இருவரும் கேப்ஷனாக, “முடிவில்லாத அன்பும் காதலும் தொடங்கி இருக்கிறது. நீதான் என் எல்லாமே. மிஸ்டர் & மிஸஸ்!” என்று பதிவிட்டுள்ளார்கள். ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
