மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்!

 
சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை மதுரை அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் விமர்சையாகக் கொண்டாடியுள்ளார்.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக மதுரையில் தங்கியுள்ள சிவகார்த்திகேயன், சுதந்திர தினத்தை முன்னிட்டு அப்பகுதி கிராம மக்களுடன் நேரடியாக இணைந்து தேசியக் கொடியேற்றித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கிராமத்து மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் அவர் எளிமையாக உரையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிகழ்வு அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சிவகார்த்திகேயன் கிராம மக்களுடனும் குழந்தைகளுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றன.