நடிகர் சோஹைல் கானின் சிறுவயது துயரம்.. பாலியல் வன்கொடுமை குறித்துப் பகிரங்க ஓப்பந்தம்!
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் சகோதரரும், பிரபல நடிகருமான சோஹைல் கான், தனது சிறுவயதில் நிகழ்ந்த மிக மோசமான பாலியல் தொல்லை குறித்த அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றைச் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
பொதுவாகப் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைப் பொதுவெளியில் பேசத் தயங்கும் சூழலில், சோஹைல் கான் தைரியமாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.
நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய சோஹைல் கான், தான் மிகச் சிறிய வயதாக இருந்தபோது இந்தத் துயரமான சம்பவத்தை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரம் முழுமையாகப் புரியாததாலும், அது குறித்துப் பிறரிடம் விவரிப்பதற்குக் கடுமையான கூச்சமும், சங்கடமும் இருந்ததால், பல வருடங்களாக யாரிடமும் கூறாமல் இந்த வலியைத் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். வளர்ந்து பெரியவனான பிறகு, தனக்கு நடந்தது எவ்வளவு பெரிய அநீதி என்பதை உணர்ந்த பின்புதான், இது குறித்துத் தனது தந்தையிடம் (சலீம் கான்) முதன்முதலாகப் பகிர்ந்து கொண்டதாக அவர் உடைந்து பேசினார்.
சோஹைல் கானின் இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வெளியாகி மின்னல் வேகத்தில் வைரலானது. அவரது இந்தத் தைரியமான வெளிப்படுத்தல், பலருக்கும் தங்களின் குழந்தைப்பருவக் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பேசும் துணிச்சலைத் தந்துள்ளது.
இச்செய்தியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்குச் சிறுவயதில் நேர்ந்த இது போன்ற மறைக்கப்பட்ட கொடுமைகளையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களையும் தங்களின் பக்கங்களில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தை பருவப் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராகக் குடும்பங்களுக்குள் வெளிப்படையான உரையாடல்கள் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
