அஞ்சாதே பட நடிகர் ஸ்ரீதர் காலமானார்... திரையுலகினர் இரங்கல்!

 
ஸ்ரீதர்

மிஸ்கின் இயக்கத்தில் 2008இல் வெளியான அஞ்சாதே படம் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீதர். இந்த திரைப்படத்தில் கால் ஊனமுற்ற நபராக ஸ்ரீதர் நடித்திருந்தார். தன் மகன் கண் முன்னே காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எனினும், சரியான வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். மேலும், விரைவில் ஒரு படத்தை இயக்கம் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web