திருச்செந்தூரில் நடிகர் சூரி சாமி தரிசனம்.... ‘கங்குவா’ படம் சிறப்பாக இருப்பதாக பேட்டி!

 
சூரி
 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சூரி, 'கங்குவா' படம் சிறப்பாக உள்ளது. எதிர்மறை விமர்சனங்களால் சிலர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர் என்றார். இது குறித்து பேசிய சூரி, 'கடந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன்.  இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியை பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். 

கங்குவா

விடுதலை 2 இப்போது வர போகிறது. அடுத்த மாதம் 20-ம் தேதி என்று நினைக்கிறேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்கள் அனைவருக்கும் பிடித்திரிந்ததோ, அதேபோல் விடுதலை 2-ம் பிடிக்கும்.கங்குவா படம் சிறப்பாக உள்ளது. ஒரு ரசிகரா, படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்த்தேன். எதிர்மறையாக சிலர் கூறுகிறார்கள். அதை நம் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் சிலர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். அதிகமானோர் நேர்மறையாக சொல்கிறார்கள். கங்குவா படக்குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

கங்குவா

விடுதலை 2' திரைப்படத்தில் இளையராஜாவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த மனிதர்களில் இளையராஜா ஒருவர். 82-வயதிலும் இசையை எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். அவர் உள்ள சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அற்புதமான வாழ்வியலை கொடுக்கக்கூடிய இசையமைப்பாளர், காலத்திற்கும் நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web