நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் த.வெ.க-வில் இணைந்தார்!

 
 நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்  நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலம் முழுவதும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாற்றுக்கட்சிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்களை இணைக்கும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பிரபலத் திரைப்பட நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் அதிகாரப்பூர்வமாகத் த.வெ.க-வில் இணைந்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று இந்தச் சிறப்பு உறுப்பினர் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய அரசியல் பிரமுகர்களும், கலை மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களும் தங்களைத் த.வெ.க-வில் இணைத்துக் கொண்டனர்.

விஜயதாரணி

திரைத்துறையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன், த.வெ.க-வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்குத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி, பொன்னாடை போர்த்தி இன்முகத்தோடு தங்களது வரவேற்பை அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை அடிமட்டம் வரை கொண்டு சேர்க்கவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியைப் பலப்படுத்தவும் இத்தகைய தொடர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இருந்து  விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி த.வெ.க-வில் இணைந்து அக்கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட திரைத்துறைப் பிரபலங்களும் த.வெ.க-வை நோக்கி வரத் தொடங்கியிருப்பது, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.