2 பாகங்களாக வெளியாகும் லியோ ?! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
லியோ

இளையதளபதி நடிகர் விஜய்யின் அடுத்த படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய்  ‘வாரிசு’ படத்திற்குபிறகு நடித்துள்ள படம்   ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.  

லியோ

மாஸ்டர் படத்திற்கு  பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அனிருத் இசையமப்பில் பரமஹம்சா ஒளிப்பதிவில்   பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உட்பட முண்ணனி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.  

லியோ
காஷ்மீர், சென்னையின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்  படப்பிடிப்புகள் முழுவதும்  நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள்   நடைபெற்றுவருகின்றன. நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்நிலையில், லியோ படத்திற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ திரைப்படத்தை  2 பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும்,  லியோ படத்தின்  2ம் பாகம் 2025/2026-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web