நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்?!

 
விஷால்

நடிகர் விஷாலுக்கு காதலியுடன் திருமணம் என்ற தகவல்    சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடி விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'மார்க் ஆண்டனி' படங்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார். முன்பு  நடிகர் விஷாலுக்கும் நடிகை வரலட்சுமிக்கும் காதல், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என  கூறினர்.  இருவரும் நல்ல  நண்பர்கள் என  அவர்களே உறுதிப்படுத்தினர் .  

விஷால்

நடிகை லட்சுமிமேனன் உடன் விஷாலுக்கு காதல் என  தகவல் வெளியானது. இவர்கள்  இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு  நடிகர் விஷாலுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணமும் நின்று போய்விட்டது. தற்போது  மீண்டும் லட்சுமி மேனன் உடன் விஷாலுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

5வது திருமணம்

இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.   நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தங்கள் திருமணம் என நடிகர் விஷால் கூறியிருப்பதால்  அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவரது திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!