ஹீரோவாகிறார் நடிகர் விஷ்ணு விஷால் தம்பி... குவியும் வாழ்த்துகள்!

 
விஷ்ணு விஷால்

ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா. ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

’ஓஹோ எந்தன் பேபி’ படப்பூஜையில்

திரையுலகில் வாரிசுகள் சாதித்தது அபூர்வம். இது தம்பிகள் ஹீரோக்களாக திரையுலகில் அறிமுகமாகும் சீசன் போல. ஏற்கெனவே நடிகை சாய்பல்லவியின் தங்கை மீரா அறிமுகமாகி, வாய்ப்புகள் கிடைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். சூர்யா தம்பி கார்த்தி தொட்ட உயரத்தை அடுத்தடுத்து அறிமுகமான தம்பி நடிகர்கள் தொடவில்லை.

நடிகர் விஜயின் தம்பி விக்ராந்த், நடிகர் அதர்வா முரளி தம்பி ஆகாஷ், நடிகர் ஆர்யாவின் தம்பி என அடுத்தடுத்து வெற்றிக்காக தம்பிகள் காத்திருக்கிறார்கள். இந்த வரிசையில் விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். 

’ஓஹோ எந்தன் பேபி’ படப்பூஜையில்

தன் மீது இந்த கவனம் இருக்கு ம்போதே அருண்ராஜா காமராஜாவுடன் தான் இணையும் அடுத்தப் படம் குறித்து அறிவித்தார் விஷ்ணு விஷால். இப்போது அவரது தம்பி ருத்ரன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ’ஓஹோ எந்தன் பேபி’. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை விஷ்ணு விஷாலின் விவிஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

விஷ்ணு விஷாலை சினிமாவில் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தினை கிளாப் அடித்துத் தொடங்கி வைத்துள்ளார். அண்ணனைப் போலவே சினிமாவில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web