திருப்பதியில் நடிகர்கள் நாகார்ஜுனா, மாதவன் சாமி தரிசனம்!

 
நாகார்ஜுனா மாதவன்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை உலகப் பிரபலங்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல தென்னிந்திய நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வருகை தந்த இரு நடிகர்களுக்கும், திருப்பதி திருமலா தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலின் ரங்கநாயகுலு மண்டபத்தில் இரு நடிகர்களுக்கும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு 'வேத ஆசீர்வாதம்' செய்தனர்.

திருப்பதி

தரிசனம் முடிந்த பின்னர் அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் ஏழுமலையானின் புனித தீர்த்தம், பட்டு வஸ்திரங்கள் மற்றும் திருப்பதி லட்டு பிரசாதங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே வந்த நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் மாதவனைக் கண்டதும், அங்குத் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள் பலரும் தங்களது மொபைல் போன்களில் இரு நடிகர்களுடனும் மிகவும் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் செல்பீக்களை எடுத்து மகிழ்ந்தனர்.