நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டணை!! ரூ5000 அபராதம்!!

 
ஜெயப்பிரதா

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல மொழிகளிலும் முண்ணனி நடிகையாக  வலம் வந்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் 1986ல் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை  திருமணம் செய்து கொண்டார்.  அதன் பிறகு என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்டார். சிறிது காலத்திற்கு பிறகு  அந்த கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு கட்சியில் தன்னை  இணைத்துக் கொண்டார்.இடையில் சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது கட்சியில் இருந்து விலகி  சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ஜெயப்பிரதா

2004ல்   உத்தரப்பிரதேச மாநில   பொதுத் தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிகை ஜெயப்பிரதா  கடந்த 30 ஆண்டுகளில் 300 திரைப்படங்கள் நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் வசித்து வரும்  ராம் குமார், ராஜ்பாபு இவர்களுடன் இணைந்து  சென்னை  அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது  குறித்து   தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து   ஜெயப்பிரதா உட்பட  மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தனர்.

ஜெயப்பிரதா

இவை அனைத்துமே   தள்ளுபடி செய்யப்பட்டன.  இந்த வழக்கின் விசாரணையில் ஜெயப்பிரதா தரப்பில்  தொழிலாளர்களிடம் பெற்ற தொகையைச் செலுத்தி விடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உட்பட   மூவருக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web