திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்து மகிழ்ந்த போலீசார்கள்!

 
ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்று நேற்று சாமி தரிசனம் செய்தார்.

‘காக்கா முட்டை’, ‘கனா’, ‘வடசென்னை’ போன்ற முத்திரை பதித்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நேற்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து, மூலவரைத் தரிசித்துச் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக, கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஆர்வமாகத் தங்களது செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அண்மைக்காலமாகத் திரைத்துறையினர் பலரும் தேர்தலுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஆன்மிகப் பயணங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தத் தரிசனம் அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தனது பணிகளுக்கு இடையே இந்த ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.