விவாகரத்து பெற்ற தயாரிப்பாளரை திருமணம் செய்கிறாரா அஞ்சலி! வெளியான அதிர்ச்சி தகவல்!

 
அஞ்சலி

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதில் ஆனந்தி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினார்.  பின்னர் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார்.

அஞ்சலி

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கம் 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் படத்தில் நடித்த பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. மேலும், இவர் நடிகர் ஜெய்யுடன் காதல் உறவில் இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அஞ்சலி

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை அவர் திருமணம் செய்யப் போவதாகவும், தயாரிப்பாளர் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் இருந்து வரும் செய்திகளின்படி, ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தபோது ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web