நடிகை அஞ்சலி ஓபன் டாக்... “ கல்யாணம் நான் எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன்!” -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் அஞ்சலி, தனது திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். “எப்போது திருமணம்?” என்ற கேள்வி தனக்கு தொடர்ந்து கேட்கப்படுவதாகவும், திருமணம் என்பது தனது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து பேசிய அஞ்சலி, “என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல என்றும் அஞ்சலி கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவதாகவும், பல விஷயங்களில் தியாகம் மற்றும் பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் குறித்த கேள்வியை தொடர்ந்து கேட்பதற்கு என்ன காரணம் என்றும் அவர் தனது பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அஞ்சலி பேசியுள்ளார். ஆடம்பரமான திருமணம், அதிகமான கூட்டம் ஆகியவற்றை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தன்னை மனதார வாழ்த்தும் சிலர் உடனிருந்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

“நல்லா இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தும் நான்கு பேரோ அல்லது நாற்பது பேரோ இருந்தால் போதும்” என்ற வகையில் தனது விருப்பத்தை அவர் பகிர்ந்துள்ளார்.அதேபோல், திருமணம் தொடர்பாக மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்காக தனது தனித்துவத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டே இருந்தால், இறுதியில் தனது சொந்த அடையாளத்தையே இழந்துவிடும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.அஞ்சலி தற்போது திரைப்படப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.திருமணம் குறித்த கேள்விகளுக்கு எந்த குறிப்பிட்ட தேதியையும் தெரிவிக்காமல், அது தனது தனிப்பட்ட முடிவு என்பதை அஞ்சலி தனது பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
