நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்... துபாய் தொழிலதிபரை மணக்கிறார்?!
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை அனுஷ்கா ஷெட்டி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபாஸுடன் காதல் என்று பல வருடங்களாக ஆந்திர சினிமா ரசிகர்களிடையே செய்தி பரவி வந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வலம் வருகின்றன.
நீண்ட நாட்களாக, அனுஷ்கா ஷெட்டி , இந்திய நட்சத்திரமான பிரபாஸுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் இருவருமே இந்தச் செய்தியை உறுதிப்படுத்தாமல், 'நல்ல நண்பர்கள்' என்று கூறிவந்தனர். ஆனால் சமீபத்தில், அனுஷ்கா ஷெட்டி விரைவில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் இணையம் முழுவதும் பரவி வருகிறது.
தனது குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமண உறுதிமொழியை பரிமாறிக் கொள்ள அனுஷ்கா தயாராகி விட்டார் என்கின்றனர். மேலும், திருமணத்தைப் பற்றி குடும்பத்தினர் ஏற்கனவே சந்தித்து விவாதித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. நடிகை அனுஷ்காவோ, அவரது குடும்பத்தினரே இந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் அனுஷ்காவின் திருமணம் குறித்த இந்த செய்தி வைரலாகிவ் அருகிறது.
அனுஷ்காவின் பெற்றோர் தங்கள் மகள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை அனுஷ்காவும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
2018ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனுஷ்கா, “நானும் பிரபாஸும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பாகுபலி மற்றும் தேவசேனா போன்ற கெமிஸ்ட்ரியை நிஜ வாழ்க்கையில் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில் ஒரு நேர்காணலில், "நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். பிரபாஸுக்கும் எனக்கும் இடையே நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை . நாங்கள் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள மாட்டோம்” என்றும் கூறியிருந்தார். அனுஷ்கா தற்போது காதி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, பிரபுதேவாவுடன் கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் என்ற கற்பனைத் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.