ஜப்பானில் புத்தர் பாதத்தில் திரவத்தை ஊற்றிய பிரபல நடிகை - விமான நிலையத்தில் சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்!

 
புத்தர் பாதம்

ஜப்பானின் புகழ்பெற்ற தேசியப் பொக்கிஷக் கோயிலில், புத்தர் சிலையின் பாதத்தில் திரவத்தை ஊற்றிவிட்டுத் தப்பியோட முயன்ற தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் முக்கிய தேசிய வரலாற்றுப் பொக்கிஷமாகக் கருதப்படும் கோயிலில், தைவான் நடிகையும் தொகுப்பாளருமான டிசாய் ஜென் என்பவர் சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள புத்தர் சிலையின் பாதப் பகுதியில், யாரும் பார்க்காத நேரத்தில் மறைத்து வைத்திருந்த கிளிசரின் திரவத்தை ஊற்றிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இது குறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாட்டை விட்டுத் தப்பியோட முயன்ற நடிகை டிசாய் ஜென்னை கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.