ரூ.200 கோடி கலெக்‌ஷன் நடிகை... மமிதா பைஜு மருத்துவமனையில் அனுமதி!

 
மமிதா

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை மமிதா பைஜு, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மமிதா பைஜு நடித்த 3 படங்களும் இந்த வருடத்தில் ரிலீஸாகி, ரூ.200 கோடி கலெக்‌ஷன் நடிகை என்று அவருக்கு பெயர் வாங்கித் தந்திருந்த நிலையில், அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் லக்கி ஹீரோயின் என படங்களில் கமிட் செய்து வரும் நிலையில், காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமைப் பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். மருத்துவர்கள் அவரை முழுமையான ஒரு வார காலத்திற்கு முழுமையாக ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

யாரு கண்ணு பட்டுச்சோ!.. ஹாட்ரிக் 200 கோடி அடித்த மமிதா பைஜு மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிளைடு மலையாளி சங்கம் சார்பில் நடைபெறவிருந்த ஓணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருந்த தனது பயணத்தை உடல்நலக் குறைவு காரணமாக அவர் தவிர்க்க நேர்ந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்ய முடியாத சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Mamitha Baiju: நடிகை மமிதா பைஜூவுக்கு என்ன ஆச்சு.? மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Times Now Tamil

தனது உடல்நிலை காரணமாகப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதற்கு  அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மமிதா பைஜு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் திரையுலகத்தினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.